அம்பாறை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களுடன் சந்திப்பு!

Friday, April 7th, 2023

அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அப்பிரதேசத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்கு வனவள ஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்து இருப்பதாக தெரிவித்த பிரதேச மக்கள், மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் தடை காரணமாக குறித்த குளத்தில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படாமையினால், பெருமளவு மீன்கள் இயற்கையாக இறந்து வருவதாகவும் அதனால் குறித்த பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் கடற்றொழில் அமைச்சரிடம் பிரதேச மக்களினால் முறையிடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக புதுவருட விடுமுறைக் காலம் நிறைவடைந்த பின்னர் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துலையாடி உரிய நடவடிக்கை யேற்கொள்ளப்படும் என்று  இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். – 07.04.2023

000

Related posts:

நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!
கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக்...
விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம் அமைச்சர் டக்ள...