கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, June 1st, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை கிளிநொச்சி மாவட்டத்தினுள் கொண்டு செல்லத்  தடை செய்யப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்,  சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே, குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

வெளி மாகாணங்களை சேர்ந்த அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி, கிளிநொச்சி மாவட்டத்தில் அகழப்படுகின்ற சட்டவிரோத மணல், பிரதான வீதியினால் எடுத்துச் செல்லப்படுவதனால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  துறைசார் அமைச்சர், துறைசார் திணைக்கள தலைவர் ஆகியோருடன்  தொடர்புக்கொண்டு கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளி மாகாணங்களில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு மணல் எடுத்து வருவதை தடுப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!
தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது - தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசிய...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத விடயங்களை எதிர்வரும் 10 நாள்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் - ...