யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத விடயங்களை எதிர்வரும் 10 நாள்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு!

Friday, September 15th, 2023

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத விடயங்களை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ் குடா நாட்டில் அண்மைய நாள்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், இன்று, யாழ் மாவட்ட செயலகத்தில், மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்தொழில் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச...
நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கரு...
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எட...

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றிணைப்பேன் - நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்...
கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை - 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்ச...