இளைஞர் யுவதிகளின் தொழில்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Sunday, December 29th, 2019

கிளிநொச்சி மாவட்டம் மட்டுமன்றி எமது அனைத்து இளைஞர் யுவதிகளதும் தொழில்துறையை வளம்படுத்தும் செயற்பாடுகளுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.

கடந்தகாலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களையும் நான் சரிவர பயன்படுத்தி எமது பிரதேச மாணவர்களின் தேவைகளை நிறைவுசெய்து கொடுத்திருக்கிறேன் என கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட தேசிய தொழில் பயிற்சி அதிகாரசமையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கான விருது வழங்கும் இன்று நடைபெற்றது.

இன்றையதினம் கிளிநொச்சி கூட்டுறவு பொது மண்டபத்தில் நடைபெற்ற
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கிவைத்க்த பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்-

யுத்தம் எமது மக்களின் எதிர்காலத்தை சிதைத்துவிட்டது என்பது உண்மைதான். ஆனாலும் அதையே காரணம் எனக் கூறிக்கொண்டிராது அதிலிருந்து எப்படி மீள வேண்டும்.என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
ஆனால் தமிழ் தேசியம் பேசி மக்களது வாக்குகளால் அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொண்ட இதர தமிழ் தரப்பினர் அவாறு செயற்படாது மக்களை ஏமாற்றுவதிலேயே கருத்தாக இருக்கின்றனர்.

இந்த நிலை மாறவேண்டும். மக்கள் மாறவேண்டும். சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். அத்னூடாகவே அனைத்தையும் சாதிக்க முடியும் என்றே நாம் கோருகின்றோம்.ப்

அதுமட்டுமன்றி இங்கு பல்வேறு தேவைப்பாடுகள் உள்ளதாக கோரிக்கைகள முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தர நாம் முழுமையாக முயற்சிகளை மேற்கொள்வேன்.

அத்துடன் பட்டம் இங்கு பெற்றுச்செல்லும் மாணவர்களுக்கான தொழில் முயற்சிகளை பெற்றுத்தருவேன் என திவித்த்ஜ அமைச்சர்வ்உங்களது நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவு செய்த்துதருவேன் என்றார்.

Related posts:


வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...
யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது: மீட்டெடுக்க வழிவகை ச...
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களு...