எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, July 17th, 2018

ஒரு மாபெரும் யுத்த மோதலினை சந்தித்து, துவண்டு போயிருக்கின்ற எமது மக்கள் தலைநிமிரக் கூடிய வழிவகைகளை உரிய முறையில் மேற்கொள்ளாமல், மீண்டும் அங்கு ஓர் இராணுவ கேந்திர நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு இடங்கொடுப்பதானது, எமது மக்களை மேலும் புண்படுத்திப் பார்க்கின்ற செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சபை ஒத்திவைப்பின் போதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இப்போதும் கூட வடக்கு, கிழக்கு கடற் பிரதேசங்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில்களில் ஈடுபடுவதற்கு பல்வேறு தடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் கடற்றொழிலாளர்களது சட்ட விரோதமான தொழில் நடவடிக்கைகள் மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை மீறியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் முயற்சிகள் என்பவற்றின் முன்பாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், எமது கடற் பகுதிகளின் வளங்களும் இன்று கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமையில், எண்ணெய் ஆய்வுகள் என்றும், இராணுவ நலன்கள் என்றும் ஒவ்வொரு நாடுகள் வந்து எமது பகுதிகளில் நிலை கொள்ளுமானால், அதனால் ஏற்படக்கூடிய எமது மக்களுக்கும், எமது பகுதிகளுக்குமான பாதிப்புகள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றோம் என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

Related posts:

வடக்கில் வரட்சி,தெற்கில் வெள்ளம் : நிவாரணங்கள், இழப்பீடுகளின் நிலை என்ன?- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் - இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...