மந்திகை பால் சாலை விவகாரம் – மீளவும் இயக்க நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Friday, March 29th, 2024


மந்திகை பாற்சாலையை மீளவும் அதே இடத்தில் ட்இயக்கி நுகர்வோராகிய எமக்கு பசும் பாலை இலகுவாக  கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்றையதினம் நடைபெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில் –

வாழ்வாதாரத்துக்காக முன்னெடுக்கப்படும் இந்த பாற்சாலையானது கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவரும் நிலையில் நுகர்வோருக்கு மட்டுமல்லாது பால் உற்பத்தியாளர்களுக்கும் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்து வருகின்றது.

இன்நிலையில் தற்போது சில காரணங்களால்  வியாபார நடவடிக்கைகளில் சில சிக்கல்கள் இருந்துவருகின்றன.

அதனடிப்படையில் எமது பால்சாலையை தற்போதுள்ள இடத்திலேயே மீளவும் புனரமைத்து தொடர்ந்தும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்து தருவதுடன் நுகர்வோரது எதிர்பார்ப்புகளுக்கும் தீர்வை பெற்றுத்தருமாறும் கோரியிருந்தனர்

கோரிக்கையின் நியாயத்தன்மையை கருத்திற்கொண்ட அமைச்சர் அது தொடர்பில் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00000

Related posts:


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும் - டக...
மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் நல்லுறவும் அவசியம் -டக்ளஸ் எம்.பி. விலியுறுத்து!
யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்த...