வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு விசேடகுழு நியமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்!

Monday, December 16th, 2019

பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள வடகடல்(நோர்த்சீ) நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேடகுழு ஒன்றை அமைக்கவிருப்பதாக கற்றொழில் நீரகவள மூலங்கள் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடகடல் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் நீரகவள மூலங்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (16.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பாரியநஷ்டத்தில் இயங்கிவருகின்ற வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தனக்குகிடைக்கும் தகவல்கள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் வடக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடகடல் நிறுவனமும் ஊழியர்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறித்த நிறுவனம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதற்கும் உற்பத்தி செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதற்குமான காரணங்களை அறிந்துகொள்வதற்காக விசேட விசாரணைக் குழுவை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை தற்போது வடகடல் நிறுவனத்திடம் இருக்கின்ற வளங்களை பயன்டுத்தி மேற்கொள்ளக்கூடிய அதிகபட்ச செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

;

Related posts:


கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ...
வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!