அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, June 4th, 2018

தமிழ் பேசும் மக்கள் எமக்கான அதிகாரப்பலத்தை வழங்கும் சந்தர்ப்பத்தில், எமது மக்களின் அன்றாடப் பிரச்சினை முதல் அரசியல் உரிமைப் பிரச்சினை வரையான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க தாம் தயாராக உள்ளோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தே வானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் லண்டன் பிராந்திய முக்கியஸ்தர்களுடனான விஷேட கலந்துரையாடலில் வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர்கருத்துத் தெரிவிக்கையில் – கடந்தகாலங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் கட்சிப் பணியாற்றி, இற்றைக்கு சுமார் 30 வருடங்களாக உழைத்துவரும் தோழர்களுக்கு இதன் போது நன்றி தெரிவித்ததுடன், மூத்த தோழர்களின் ஒன்று கூடல் புத்துணர்வைத் தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மக்களால் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை எதிர்காலத்தில் செப்பனிட்டு, அன்றாடப் பிரச்சினை முதல் அரசியல் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்காக நாம் தொடர்ந்து உழைப்பதுடன், எமது கட்சியைப் பலப்படுத்தி, அனைத்து அரசியல் தளங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை நிலைநிறுத்துவதற்கு தோழர்கள் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த காலத்தில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தவறவிட்டவர்கள் போன்று, நிகழ்காலத்தில் மாகாணசபை ஊடாகக் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை இன்று பயன்படுத்தத் தெரியாமல், உதாசீனப்படுத்துபவர்கள் அல்லது அதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் போன்று, எதிர்காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் இருக்காது, மக்களால் ஆணைகள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றைத் திறம்பட முன்னெடுத்துச் செல்லத் தாம் தயாராகவுள்ளதுடன், மக்களுக்கான செயற்திட்டங்களைச் செழுமைப்படுத்தி செயற்படுத்துவதற் குதிடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மக்கள் வழங்கும் அதிகாரப் பலத்தில் தானே இருந்து அதனைத் திறம்பட செயற்படுத்தி மக்களுக்கான அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைப் பெற்றுத் தருவேன் எனவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Related posts:


ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றது சைக்கிள் கட்சி: அமைச்சர் டக்ளஸிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
ஆதாரமற்ற, பொய்யான பிரசாரங்களால் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது - அ...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - ஜப்பான் அரசினால் கடற்றொழில் துறைய...