சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைப்பு!

Wednesday, March 9th, 2022

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து (Liyana sea food)  முன்னெடுத்துள்ள கடல் சுற்றுலா படகான “விக்லியா” (“VICLIYA”) படகின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் குருநகர் இறங்கு துறையில் நடைபெற்றது.

இந்த உல்லாசப்படகின் வெள்ளோட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்த அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த திட்டத்தை முதலீடு செய்து முன்னெடுத்து முயற்சியாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த உல்லாச சேவையின் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்’று சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் இதை மேலும் விரிவாக்கம் செய்து பலதரப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளின் உல்லாச பயணிகளையும் இப்பகுதிக்கு வருகைதருவதை ஊக்கப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கு தம்மாலான ஒத்துழைப்புக்ளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதேவேளை சுற்றுலாப்பயணிகளுக்கான குறித்த நவின வசதிகளுடன் கூடிய ஆடம்பர குளிருட்டப்பட்ட உல்லாசப் படகு சேவையானது யாழ்நகரை அண்டிய சிறுத் தீவிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: தேசத்தை கட்டியெழுப்ப அபிவிருத்தி - டக்ளஸ் தேவானந்தா
வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் - பாஷையூரில...
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட நிதியை பெற்றுக்கொள்ள...

இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர...
விடுமுறை தினத்தில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்!