பூநகரி, சோலைநிலா குடியிருப்பு  பகுதிக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்க  டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Monday, April 18th, 2016

தமது வீடுகளுக்கான மின் இணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் செய்திருந்தும் உரிய காலத்தில் தமக்கான மின்சார இணைப்புகள் வழங்கப்படாமையால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமது வீடுகளுக்கான மின்னிணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும்  கோரி பல்லவராயன்கட்டு கிராமசேவகர் பிரிவின் கீழ்வரும் சோலைநிலா குடியிருப்பு பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி, சோலைநிலா குடியிருப்பு பகுதியிலுள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த மக்களது பிரதிநிதிகள் இன்று(18) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை யாழ் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இதுதொடர்பாக தமது முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது –

கடந்தகால அழிவு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமது பகுதிக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கின் வசந்தம் ஊடாக மின்னிணைப்புகள் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து படிமுறைகளும் பூர்த்திசெய்யப்பட்டிருந்த நிலையில்  நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக தமது விண்ணப்பங்கள் தற்போது நிராகரிக்கப்பட்டு இழுத்ததடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டுக்குமேலாக எமது பகுதியிலுள்ள 40 வீடுகளில் மின்சார வேலைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், எமது பகுதியூடாக பிரதான மின் கம்பங்கள் மூலம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் எமக்கான மின்னிணைப்புகளை தருவதில் ஒரு சில அரசியல் தலையீடுகள் காரணமாக இணைப்புகள் வழங்கப்படுவது காலதாமதமாக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சோலைநிலா குடியிருப்பு பகுதி மக்களது மின்னிணைப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்த செயலாளர் நாயகம் துறைசார் அதிகாரியை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு குறித்த பகுதிக்கான மின்னிணைப்புகளை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

b08aa3f1-e7d4-401b-b9d2-9371a2a2b20f

Related posts:

வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்; எம்.பி வலி...
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.