அமெரிக்க தமது நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலன் சார்ந்தே சிந்தித்து செயற்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020

மெரிக்க தமது நாட்டு நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலம் சார்ந்தே சிந்தித்து செயற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்க பதில் அளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வருகைக்கு வழமை போன்று எதிர்க் கட்சியினர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். ஓர் எதிர்கட்சியாக அது அவர்களின் வழமையான செயற்பாடாகும்.

அவர் இலங்கைக்க மாத்திரமல்ல பல்வேறு நாடுகளிற்கும் சென்று ஒப்பந்தங்களை செய்துள்ளார். அமெரிக்கா தமது நாட்டின் நலன் சார்ந்தே செயற்படும். அதேபோன்று இலங்கையும் தமது நலன் சார்ந்தே செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் சீன தூதரகமும் அறிக்கை ஒன்றின் ஊடாக தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றதே என ஊடகவியலாளர் அவரிடம் வினவினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், சீனா எதிர்ப்பு தெரிவித்த விடயம் தொடர்பில் தெரியாது. ஆனால் கொவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணமாக அரசு நெருக்கடியில் உள்ளது. பண தேவை அதிகமாக உள்ளது. சந்திரிக்காவின் ஆட்சி காலம் தொட்டு பல்வேறு கடன்களை இலங்கை அரசு பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் தற்புாது உள்ள சூழலிலும் தேவைப்பாடு அதிகம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் சீன அரசிடம் கடனாக பணம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சீனா எதிர்ப்பினை வெளியிட்டிருக்கலாம் எனவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.

Related posts: