நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் – பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தஞ்சம்!

Wednesday, December 25th, 2019

தொல்பொருள் திணைக்களத்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நல்லாட்சி அரசு கொடுத்த உத்தரவாதமற்ற தற்காலிக நியமனங்களால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கடந்த ஆட்சிக்காலத்தில் தொல்பொருள் திணைக்களத்தில் வழங்கப்பட்ட நியமனங்களால் தற்போது இடைனிறுத்தப்பட்டுள்ளவர்கள்
கடல்தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் சென்ற பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அமைச்சரை சந்தித்து தமது பரிதாப நிலைகுறித்து தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த நல்லாட்சி கலத்தில் பல தில்லுமுல்லுகள் நடைபெற்று எமக்கு இந்த நியமனங்கள் பெற்றுத்தரப்பட்டன.
இதை யாழ்ப்பாணத்தை பிரதினிதித்துவப்படுத்திய பெண் அமைச்சர் ஒருவரே மேற்கொண்டிருந்தார்.
நியமனம் வழங்கப்பட்டபோது அது தற்காலிக நியமனம் என்பது தெரிந்து நாம் அவரிடம் கேட்டபோது அதற்கான சாதகமான பதிலை வழங்கியிருக்கவில்லை.
இதுபோல பல நியமனங்கள் அவரால் மேற்கொள்ளப்பட்டபோதும் அவையும் ஒரு நம்பகத்தன்மை அற்றதாகவே காணப்படுகின்றன. அத்துடன் இந்த நிரந்தரமற்ற நியமனத்தால்
நாம் எமது எதிர்காலம் தொடர்பில் அச்சமடைந்துள்ளோம்.

குறித்த காலப்பகுதியில் வடக்கில் 125 தொல்பொருள் உத்தியோகத்தர்களுக்கு
நியமனங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு தகுதிகளுக்கு ஏற்றது வகையில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினர்.

இன்னிலையில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களின் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தாம் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தங்களது நியமனங்களை மீளப் பெற்றுத்தருமாறு கோரி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களது கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தருவதாகவும், அமைச்சரவை பத்திரமொன்று இது குறித்து தாக்கல் செய்யப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பாதிப்பில் யாழ்ப்பாணம், மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 125 பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கல...