திருத்த வேலைகளுக்கான படகுகளை கரையேற்ற குருநகரில் புதிய பொறிமுறை – அமைச்சரின் டக்ளஸின் பணிப்புரையில் அதிகாரிகள் கள விஜயம்!

Tuesday, August 18th, 2020

குருநகர் மீனவர் இறங்கு துறையில் படகுகளை திருத்த வேலைகளுக்காக கரையேற்றுவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று(18) குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட மீன்பிடித் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

குருநகர் மீனவர் இறங்குதுறையை பயன்படுத்தி சுமார் 400 இற்கும் மேற்பட்ட மீனவர் படகுகள் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில், திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய படகுகளை  கரையேற்றுவதற்கான பொறிமுறையை உருவாக்கித் தருமாறு சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினையடுத்து, குறித்த கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, தொண்டமானாறு பிரதேசத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்;ட கடற்றொழில் திணைக்களம் மற்றும் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள், தொண்டமானாறு களப்பினுள் காணப்படும் இடிந்த பழைய பாலத்தின் அணைக்கட்டினை அகற்றும் வேலைத் திட்டங்களை அவதானித்ததுடன் ஏற்கனவே சுமார் 50 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய பணிகளை விரைவுபடுத்துவதற்கான அறிவுறுதல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்...
சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் த...