அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
Friday, July 14th, 2023
நாரா நிறுவனத்தினால் அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், உள்ளூர் இழுவைப் படகுகளினால் பாதிப்பு ஏற்படுவதாக பிரதேச கடற்றொழிலாளர்கள் முறையிட்ட நிலையிலேயே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட சேற்று நிலப் பகுதிகளில் மாத்திரம் மீன்ப் பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு உள்ளூர் இழுவைப் படகுகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் - தம்பிலு...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட பூஜை வழிபாடு...
போதையூட்டும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
|
|
|
வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் - புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
டோக்கியோ சிமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை பூநகரியில் - முதல் கட்ட திட்ட வரைவு நிறுவனத்தின்...


