நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தொடரும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, May 25th, 2022

வாழ்கையில் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் வகையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பு தொடரும் எனவும் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளுள் பெரும்பாலானவர்கள் கடந்த கால அழிவு யுத்தத்தின் வடுக்களை சுமந்தவர்களாக இருப்பதனால், வாழ்வாதார ரீதியிலும் வலுப்படுத்த வேணியவர்களாக கிளிநொச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் காணப்படுகின்றமையினால் அதுதொடர்பாகவும் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தியதுடன் எதிர்காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ரீதியிலான மாற்றுத் திறனாளிகளுக்கான மெய்வல்லுநர் போட்டிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

000

Related posts:


வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ...
குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!