குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 24th, 2019


யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத மணல் கடத்தல், வாள்வெட்டு உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டுள்ள இந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

யாழ் மாவட்டத்தில் இன்று பல்வேறு வடிகவங்களில் சட்டவிரோத செயற்பாடகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுள் குறிப்பாக சட்டவிரோத மண்ணகழ்வு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, வாள்வெட்டு, சட்டவிரோத கால்நடை கடத்தல் இதரபல சமூக விரோத செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது அவசியம்

எமது மக்களை அச்சுறுத்திவரும் இந்த சமூகவிரோத செயற்பாடுகளால் நாளாந்தம் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுவதுடன் இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சட்டவிரோத செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டப்படுத்த துறைசார் தரப்பினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும்.

அதர்துடன் சட்டவிரோத மணல் அகழ்வுகளை தடுத்து மணல் விநியோகத்தில் ஒரு தோசிய கொள்கை ரீதியிலான திட்டடம் ஒன்ற உருவாக்குவதற்கு நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்வுகளை காண்பதற்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன.

அந்தவகையில் முன்னெடுத்துள்ள இந்த செயற்பாட்டுக்கு அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறையினரது ஒத்துழைப்புக்கள் மிக அவசியமாகும் என தெரிவித்தார்.

Related posts:


மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப...
வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பேன் - அல்லைப்பிட்டிஒளிவிழாவில் அமைச்சர்...