அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – மன்னார் நானாட்டானில் சதொச விற்பனை நிலையம் திறப்பு!

Monday, April 6th, 2020

மன்னார் நானாட்டான் பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவை கருதி கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் புதிதாக சதொச விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதில் நானாட்டான் பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த மக்களது அத்தியாவசிய தேவை கருதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுத்து மக்களின் நியாயமான கோரிக்கைக்கு உடனடித் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதன்பிரகாரம் இன்றையதினம் குறித்த பகுதியில் புதிதாக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் சதொச விற்பனை நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் எதிர்கொள்ளும் உணவு தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டும் இப்பிரதேசத்தில் சதோச நிறுவனம் , பல நோக்கு கூட்டுறவு சங்கம் , நானாட்டான் பிரதேச செயலகம் என்பவற்றுக்கூடாக மக்களுக்கான சேவையை செய்ய தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: