தோழர் ரவீந்திரனின் புகழுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Monday, February 24th, 2025

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் (தோழர் இரவீந்திரன்) அம்பலம் இரவீந்திரதாசனின் புகழுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 22 ஆம் திகதியன்று காலமான அமரர் தோழர் இரவீந்திரதாசனின் இறுதி நிகழ்வுகள் இன்று (24.02.2025) இடம்பெற்றது.

இதன்போது, அஞ்சலி உரையாற்றிய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,

“மக்களின் துயர் துடைக்க அயராது உழைத்து நல்லூர் பிரதேசத்தில் மகத்தான சேவைகளை முன்னெடுத்த தோழர் இரவீந்திரனின் இழப்பு பேரிழப்பாக அமைந்துள்ளது.

எமது மக்களின் வாழ்வை எண்ணி எம்முடன் உழைத்தவர்,

சமாதானம், சமவுரிமை, சமத்துவ நீதி, இவைகளுக்காக எமது உண்மை வழியின் மீதான  உயிரச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டு எம்முடன் இணைந்து
நடை முறைசாத்திய வழியில் உறுதியுடன் உழைத்தவர் பாசமிகு தோழன் ரவீந்திரன் அவர்களுக்கு அஞ்சலி மரியாதை” என தெரிவித்திருந்தார்.

ஈ.பி.டி.பி. கட்சியின் மூத்த தோழரின் இறுதி நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள், மாவட்டங்களின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை - நாடாளுமன்றில் டக்...
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் - உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டி...