நாம் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என தமிழ் மக்களிடம் கூறியது கிடையாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2019

கோட்டபாய ராஜபக்ச தொடர்பில் யார்? என்னவிதமாக கருத்துக் கூறுகின்றார்கள் என்பது தொடர்பாக நாம் அக்கறை கொள்ளவில்லை. ஏன் என்றால் நான் அரசுகளை நம்புங்கள். அரசுகள் தாம் வழங்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார்கள் என்று நாம் ஒருபோதும் தமிழ் மக்களிடம் கூறியதில்லை.

நாம் யாரை ஆதரிக்கின்றோம், எந்தக் காரணங்களுக்காக ஆதரிக்கின்றோம் என்பதெல்லாம், எமது சுய நலன் சார்ந்த முடிவுகளல்ல. தமிழ் மக்களின் இன்றைய அவல நிலையையும், அதிலிருந்து அவர்களை எவ்விதமாக மீட்டெடுப்பது என்பதையும் சிந்தித்தே நாம் தீர்மானித்திருக்கின்றோம் என்பதை மக்கள் அறிவார்கள் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் சிறுபான்மையினரில் பெரும்பாலானோர் கோட்டாபாய ராஜபக்சவை வெறுக்கின்ற நிலையில், தங்களின் எதிரியாக நினைக்கிற  நிலையில் அவர்கள் அவருக்கு வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என தினகரன் வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது நிருபரால் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் –

தேர்தல்களின்போது நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள். நாம் எதிர்பார்க்கும் ஆணையை மக்கள் எமக்கு வழங்கும்போது, நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாமே நிறைவேற்றுவோம். ஆகவே மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ளவேண்டியது எம்மீதாகும்.

அரசுகள் ஏமாற்றிவிட்டன என்றோ, நாம் நம்பி ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றோ நாம் ஒருபோதும் கூறியதுமில்லை. கூறப்போவதில்லை. தெற்கில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அந்த ஆட்சியில் நாம் பங்கெடுத்திருந்தால், எமது மக்களின் தேவைகள், பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருகின்ற பொறுப்பு எம்முடையதாகும். அதை நாம்ஒருபோதும் தட்டிக்கழித்துச் செயற்படுவதில்லை.

எனவே நீங்கள் கூறுகின்ற நிலைமை மாறும் என்றும்,மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனையின் அடிப்படையில், நம்பிக்கையோடு எமது கரங்களைப் பலப்படுத்தி புதிய அத்தியாயத்தை எதிர்வரும் காலங்களில் தொடங்குவார்கள் என்றும் நாம் நம்புகின்றோம் என்றார்.

Related posts:

கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்...
கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட விரும்புவோருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெ...