சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் – மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறவினர்கள் கோரிக்கை!

Monday, May 6th, 2024

பல நாள் படகில் சர்வதேச கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்த முற்பட்டவேளையில் இடைநடுவே சீசெல்ஸ் கடற்படையினால் காப்பாற்றப்பட்டு சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விரைவாக மீட்டுத் தருமாறு கைதுசெய்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.    

நான்கு மாதங்களுக்கு மேலாக சீசெல்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்கள் மிகவும் துயரத்தில் இருப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.  

எனினும் அந்த நாட்டில் எடுக்கப்டும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவர்களை விடுவிப்பதில் தாமதப்போக்கு இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் எனினும் விரைவில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
சல்லி மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை...