சல்லி மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் துரித நடவடிக்கை!

Sunday, May 5th, 2024

திருகோணமலை சல்லியில் உள்ள மீன்பிடி இறங்குதுறைப் பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

குறித்த இறங்குதுறைப் பகுதிக்கு இன்று சென்றிருந்த அமைச்சரைச் சந்திக்க வருகை தந்திருந்த கடற்றொழிலாளர்கள் கடல்முகப்புப் பகுதியில் மணல் தேங்கிக் கிடப்பதால் படகுகளை உட்பகுதி நோக்கி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

ஏற்கெனவே இவ்வாறு மணல் நிறைந்திருந்தபோது அதை அகழ்வு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தபோதும் கால நிலைக்கேற்ப மீண்டும் அவ்விடத்தில் மணல் குவிந்து இருப்பதையும், அத்துடன் இறங்குதுறையின் உட்பகுதியும் மணல் நிறைந்து காணப்படுவதால் அதையும் அகழ்ந்து உதவுமாறும் தொழிலாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

அது தவிரவும் இடிந்து காணப்படும் இறங்குதுறையின் ஒருபகுதியை புனரமைத்துத் தருமாறும் கடலுக்கு தூண்டில் மீன் பிடிக்கு போகும் தொழிலாளர்கள் இரண்டு மின்கலங்களை கடலுக்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை கல்லறாவு பகுதியில் கரைவலை செய்யும் தொழிலாளர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்தார்.

தாம் கரைவலைத்தொழிலை செய்துவரும் நிலையில் தமக்கு நேரே ஆழமான கடற்பகுதியில் வேறு பகுதியில் இருந்து வரும் நபர்கள் தடைசெய்யப்பட்ட டைனமைட் வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி அங்கேயே மீன்களை பிடித்துச்செல்வதாகவும் அதனால் சிலவேளைகளில் தமது கரைவலைக்கு மீன் கிடைப்பதில்லை என்று தொழிலாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை திருகோணமலை கல்லறாவு கரைவலை செய்யும் இடங்களை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு கடலையும், களப்பையும் இணைக்கும் இயற்கையான முகத்துவாரப் பகுதியை 2011 ஆம் அருகில் உள்ள தனியார் காணி உரிமையாளர் மண் மூடைகள் போட்டு தடுத்துவிட்டதால் களப்பில் இயற்கையாக உருவாகும் மீன் , இறால், மட்டி போன்றவை இப்போது குறைந்து அல்லது இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு இன்று விஜயம் செய்து நிலைமை அமைச்சர் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக திருகோணமலை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கல்லறாவு பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு இறால் வளர்ப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்.

குறித்த காணியை விடுவிப்பதில் வன இலாக்கா திணைக்களத்தின் இடையூறுகள் இருப்பதை கிழக்கு மாகாணத்திற்கான நெக்டா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் அமைச்சருக்கு எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவி...
அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் யுவதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு...