தபால் சேவையை நவீன மயப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, December 8th, 2016

எமது நாட்டின் பொது மக்களுடன் பரிச்சயமான மிக முக்கிய துறையான தபால் சேவையானது இன்றைய பல்வேறுபட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பிரபலமாகாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அதன் முக்கியத்துவத்தின் அவசியம் தொடர்ந்து எமது மக்களுக்கு இருப்பதாகவே கருதுகின்றேன். அந்த வகையில் இத் துறையானது மேலும், மேலும் நவீனமயப் படுத்தல்களுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த நிலையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இத்துறை சார்ந்து சில தேவைகளை இங்கு முன்வைக்கலாம் என நினைக்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (08) வரவு – செலவுத் திட்டத்தின் புத்ததாசன அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சுத் தொடர்பான குழு நிலை விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

யாழ் தபாலகத்தில் மெயில் கொண்டு செல்ல ஒரேயொரு தரமற்ற வாகனமே இருப்பதால் இன்னொரு வாகனமும், மின்சாரம் தடைப்படும் நேரத்தில் பயன்படுத்த ஒரு மின் பிறப்பாக்கியும் தேவை.

மேலும், யுத்தத்திற்கு முன்னர் முல்லைத்தீவில் அமைந்திருந்த தபாலதிபருக்கான அலுவலகத்தை அங்கு மீள அமைப்பதற்கும், வருமானம் கூடிய தபாலகங்களைத் தரமுயர்த்துவதற்கும், உப தபால் அதிபர்களாகக் கடமையாற்றுவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதால், அவர்களுக்கான வீட்டு வசதிகள் தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கும், அவர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கும், உயரதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கும், மேலதிக சீருடைகளை தபாலகப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கும், தரமான மழை அங்கிகளை வழங்குவதற்கும், போதியளவிலான துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-4 copy

Related posts:


கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்ச...
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்பாக இடத்திற்கு இடம் வித்தியாசமான அபிப்பிராயங்கள் - தீர்க்கமாக ஆரா...
புதிதாக சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் அம...