கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, June 29th, 2022

கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியில் சுமார் 16.2 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை பாரவையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொட்டிகளின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கினார்

இதனிடையே பாரிய பாலை மீன் பண்ணையை சுமார் 20 மில்லியன் ரூபாய் தனியார் முதலீட்டின் மூலம் பள்ளிக்குடா, வளர்மதி கிராமத்தில்  உருவாக்குவது  தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த கிராமத்திற்கு  அதிகாரிகள் சகிதம் இன்று நேரடி விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர், குறித்த பண்ணையை அமைப்பதற்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பள்ளிக்குடா, மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களினால் உருவாக்கப்பட்டுள்ள ‘தேவா கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அத்துடன் பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், தற்போது நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை வினைத் திறனாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: