நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, May 24th, 2018

சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக் கொள்வதே சிறந்தது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்;.

இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த வருடத்தில் ர~;யா இலங்கைத் தேயிலையை தடை செய்திருந்தபோது, இந்த நாட்டில் தேயிலைச் சபையானது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. இன்றும் அந்தக் கேள்வி எமது மக்களிடையே வாபஸ் பெறப்படாமலேயே இருந்து வருவதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

குறிப்பாக, ‘கழிவுத் தேயிலை’ என இனங்காட்டப்படுகின்றவை தொடர்பில் ஓர் உரிய பொறிமுறையினை உருவாக்குவதற்கு உங்களால் இன்னும் இயலாதிருக்கின்றது. உண்மையிலேயே நீங்கள் கூறுகின்ற வகையில் இவை ‘கழிவுத் தேயிலை’ அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, தேயிலையை அரைக்கின்றபோது, வெளித் தோல் அகன்று, வெளிப்படுகின்ற தண்டுப் பகுதிகள் அடர் பொன்னிறமாக மாற்றம் பெறுகின்ற நிலையில், அவை கறுப்பு நிறத்தைக் கொள்வதில்லை. அதிக சந்தைக் கேள்வியானது கறுப்பு நிறத் தேயிலைக்கே இருப்பதால், மேற்படி அடர் பொன்னிற தேயிலையானது கேள்விச் சந்தையில் நிராகரிக்கப்படுகின்றது. இவ்வகைத் தேயிலை மிக அதிகமாக துளிர் தேயிலைகளினால் கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக் கொள்வதே சாலச் சிறந்தது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஆனால், இவை சந்தை கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்பட்டர்லும், இவற்றை மூலப் பொருளாக மாத்திரம் ஏற்றுக் கொண்டு,  இந்த மூலப் பொருளை முடிவுப் பொருளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதாவது, இதற்கு பல்வித சேர்க்கைகள் சேர்க்கப்பட்டு, நல்ல தேயிலையாக மாற்ற முடியும்.

Untitled-16 copy

Related posts:


குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் - ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!...
இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!