நெடுந்தீவு கிழக்கில் பேருந்து தரிப்பிடத்தை அமைக நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸினால் வடக்கின் பொது முகாமையாளரிடம் காணி உரிமப்பத்திரம் வழங்கிவைப்பு!

Wednesday, August 11th, 2021

நெடுந்தீவு கிழக்கு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தை அமைப்பத்காக இரண்டு பரப்புக் காணியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வட மாகாண இ.போ.ச. பொது முகாமையாளர் குலபாலச் செல்வனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவை சேர்ந்த மருதைனார் புஸ்பநாதன் என்பவர் குறித்த காணியை பேருந்து தரிப்பிடத்தை அமைப்பத்காக வழங்கியிருந்தார்.  இந்நிலையில் அதற்கான உரிமத்தை அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் வைத்து வட மாகாண இ.போ.ச. பொது முகாமையாளர் குலபாலச் செல்வனிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையளித்திருந்தார்.

வட மாகாண இ.போ.ச. பொது முகாமையாளர் குலபாலச் செல்வன் தலைமையிலான பிரதிநிதிகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சாலைகளில் சீர்செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது உடனடியாக தீர்க்கக் கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பிருடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சரினால் சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து பொதுப்போக்குவரத்து சேவைகளை நடத்துவது மற்றும் அரச பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இணைந்த நேர அடடவணையின் அடிப்படையில் சேவையில் ஈடுபடுவதில் காணப்படும் சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த வடக்க மாகாண தனியார் போக்குவரத்துச் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: