கைவிடப்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளுடன் போராடும் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 9th, 2017
இளமருதங்குளம் மற்றும் சேமமடு ஆகிய இரண்டு கிராமங்களிலும், போருக்கு முன்பதாக சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்திருந்து வந்தனர். போருக்குப் பின்னரான தற்காலத்தில் இளமருதங்குளத்தில் சுமார் 19 குடும்பங்களும், சேமமடு கிராமத்தில் சுமார் 65 குடும்பங்களுமே வாழ்ந்து வருகின்றனர். மேற்படி கிராமங்களில் போருக்கு முன்னர் சுமார் 1100 ஏக்கர் நிலத்தில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில், தற்போது காட்டு யானைகளின் பிரவேசங்கள் காரணமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ள இயலாத நிலையேற்பட்டுள்ளது என்று மீள்குடியேற்ற, புனரமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் அவர்களிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பினார்.
வவனியா மாவட்டத்தில், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டு, ஓமந்தை சந்திக்கு கிழக்காக சுமார் 7 கிலோ மீற்றர் தூரத்தில் இளமருதங்குளம் எனும் கிராமமும், அங்கிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் சேமமடு எனும் கிராமமும் அமைந்திருக்கும் நிலையில்,
நேற்று (08.08.2017) திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுவாமிநாதனிடம் மேற்குறிப்பிட்ட இரு கிராமங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், அங்குள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், இளமருதங்குளம் மற்றும் சேமமடு கிராம மக்களின் நலன் கருதி இதுவரையில் ஏதேனும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும் கேள்வியை முன்வைத்ததுடன், இக்கிராமங்களில் வாழும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான திட்டங்கள் ஏதேனும் முன் வைக்கப்பட்டிருந்தால் அதை இச்சபைக்கு முன்வைக்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்

Related posts:

தீவகப் பகுதிகளில் வீட்டுத் தோட்டச் செய்கையாக தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிர்கள் ஊக்கவிக்கப்...
ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பக்கபலமாக நான் இருக்கின்றேன் - இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்கா...

மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய...
இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் - அமைச்சர் டக்ளஸ் தேவான...
பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடல்!