அனைத்து மதங்களினதும் வணக்க ஸ்தலங்களும் புனரமைக்கப்பட வேண்டும்.

Friday, January 6th, 2017

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் விஷேட அபிவிருத்தித் திட்டங்கள் உங்களின் தலைமையிலும், வழி காட்டுதலிலும் நடைபெறுவதை வரவேற்கின்றேன். அபிவிருத்திப் பணிகள் எமது மக்களுக்கு பயனுள்ள வகையிலும், வெற்றிகரமாகவும் அமைய வேண்டுமெனவும் நாம் விரும்புகின்றோம் அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருக்கும், தமிழ், முஸ்லிம், கிறிஸ்த்தவ சமூகங்களின் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற வணக்கஸ்த் தலங்களையும் புனரமைக்கவும், புதிதாக கட்டியெழுப்பவும் நீங்கள் ஆவண செய்யவேண்டு மென்று கேட்டுக் கொள்கின்றேன்.  என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாது, ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம், வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட விகாரைகளைப் புனரமைப்புச் செய்வதற்கும், புதிதாக விகாரைகளை கட்டியெழுப்புவதற்கும் படையினரை ஈடுபடுத்துவதென்றும், அதற்காக விடுமுறையிலிருக்கும் படையினரை கடமைக்கு அழைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது.

அதுபோலவே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருக்கும், தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ மதங்களின் வரலாற்று ரீதியாக அமையப் பெற்ற சமூகங்களின் வணக்கஸ்த்தலங்களையும் புனரமைக்கவும், புதிதாக கட்டியெழுப்பவும் நீங்கள் ஆவன செய்யவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதில், சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் கிறிஸ்த்தவம் என இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரின் பங்கும், விருப்பமும் இருந்திருக்கின்றது. எனவே உங்களின் நேரடி வழிகாட்டலில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் அனைத்து இன, மத மக்களினதும் அபிலாiஷகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

வடக்கு, கிழக்கில் வரலாற்று ரீதியாக அமையப் பெற்ற விகாரைகள் புனரமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுபோல், வரலாற்று ரீதியாக அமையப் பெற்றுள்ள ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களும் அதே அக்கறையோடு புனரமைக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளே, இன ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் வளர்த்தெடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உதவியாக அமையும் என்றும் தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

11

Related posts: