கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 25th, 2019

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என – பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கேழுப்பியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த சில தினங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த விடயங்கள் மற்றும் தகவல்கள் என்பவற்றின் பிரகாரம் அமெரிக்க தூதரகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றினை இலங்கையில் அமைப்பது தொடர்பான விடயம் பற்றி இந்நாட்டு மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முக்கியமாக அதனை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை பிரதேசத்தில் அமைப்பதற்கு இதன் பிரகாரம் எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளமையால் அவ்விடயம் தொடர்பாக எனது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அத்தகவல்கள் பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் சில தினங்களுக்கு முன்னர் “டேலி மிரர்” பத்திரிகைக்கு செவ்வியொன்று வழங்கியுள்ளமை தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இது பற்றி டேலி மிரர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக குறிப்பிடப்பட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

அதனால் இத்தகவல் பற்றிய நம்பகத்தன்மை பற்றி எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இவற்றிற்கு மேலதிகமாக கௌரவ அத்துரலியே ரத்தன தேரர் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ள இவ்விடயம் தொடர்பான பல்வேறு தகவல்கள் பற்றியும் எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

இதில் யாதேனுமொரு உண்மைத் தன்மை இருப்பின் அது எமது நாட்டின் இறைமைக்கும் தேசிய சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.எனவே இவ்விடயம் பற்றிய பூரண அறிக்கை ஒன்றினை வழங்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

Related posts: