ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். குறித்த நிகழ்வில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு இந்து சமய கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட குறிப்பிடத்தக்கது.
Related posts:
காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம் வனத்துறைக்கு சொந்தம் என்றால் மக்கள் எங்கே குடியிருப்பது? - நாடாளுமன்...
மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? - யாழில் ஊடகவியலாள...
கூட்டமைப்பு நடத்திக்கொண்டிருப்பது வேடிக்கை அரசியல் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|