அரச ஸ்தாபனங்களில் மூவினப் பிரதிநிதிகள் அவசியம்!நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, November 20th, 2016

ஆணைக் குழுக்களை அரசு ஏற்படுத்துகின்றபோது அவற்றில்  தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் பிரதிநிதிகளை நியமிப்பது அவசியமாகும். அத்துடன், அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளிலும் மேற்படி மூவின மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் பிரதிநிதித்துவங்கள் அவசியமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாகாண மேன் முறையீட்டு நீதிமன்றங்களிலும்,  மேல் நீதிமன்றங்களிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரதிபலிக்கின்ற வகையில் நீதிபதிகளின் நியமனங்கள் அமைய வேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற மொழியாக தமிழ் மொழி இருப்பதாலும், வழக்குகள் மேல் நீதிமன்றங்களுக்கு மேல் விசாரணைகளுக்காக வருகின்றபோது, அவ்வழக்குகளுக்கான தஸ்தாவேடுகளும், ஆவணங்களும் தமிழ் மொழியில் இருப்பதால், தமிழ் மொழி மூலப் பரிச்சயமற்றவர்கள் மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக கடமைகளில் இருக்கின்ற காரணத்தினால் வழக்கு விசாரணைகளில் நீண்டகால தாமதமேற்பட்டு, வழக்காளிகள் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இவ்வாறான பொது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை மனதில் கொண்டு, அந்தந்த இடங்களில் காணப்படுகின்ற இன விகிதாசார அடிப்படையிலும், தேவைகளின் நிமித்தமும், தமிழ் மொழி பரிச்சயமுள்ள நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Untitled-1-copy-6-300x213

Related posts:

எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத...
இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன் ஏற்றுமதித் தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்...

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மு...
மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
அத்துமீறிய கடற் தொழிற் செயற்பாடுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தே...