ஏற்றுமதிக்கான உற்பத்தியில் அதிக அக்கறை வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 21st, 2017

எமது நாடு இன்று வலு குறைந்த பொருளாதாரத்திற்கு மத்தியில் அதிகரித்த இறக்குமதிகளுடனும், குறைவான ஏற்றுமதிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையே தொடர்வதாகத் தெரிய வருகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இவ்வடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் –

2015ஆம் ஆண்டு 10546.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த எமது மொத்த ஏற்றுமதி வருமானமானது, 2016ஆம் ஆண்டில் 10309.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டிருக்கின்ற நிலையில், மொத்த இறக்குமதி செலவானது 2015ஆம் ஆண்டு 18934.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, 2016ஆம் ஆண்டில் அது 19400.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் காணக் கூடியதாகவுள்ளது.

இறக்குமதிப் பொருட்கள் தொடர்பில் அவதானிக்கின்றபோது, நுகர்வுப் பொருட்களுக்கான இறக்குமதி செலவு 2015ஆம் ஆண்டில் 4,713.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் அது 4,319 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ள போதிலும், இடைநிலைப் பொருட்கள் என்ற வகையிலான எரிபொருள், மசகு எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம், நிலக்கரி, கோதுமை, சோளம், அருங் கற்கள், புடவைகள் மற்றும் புடவைகளுக்கான அணிகலன்கள், இரசாயன உற்பத்திகள், வைரம், தங்கம், கனிய உற்பத்திகள் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கான செலவுகளில் அதிகரித்த தண்மையையே காணக் கூடியதாகவுள்ளது.

அந்த வகையில், மேற்படி இடைநிலைப் பொருட்களுக்கான செலவினம் 2015ஆம் ஆண்டில் 9,638.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, அது 2016ஆம் ஆண்டில் 9,870 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையைக் காணக் கூடியதாகவுள்ளது.

இந்த வகையில் பார்க்கின்றபோது, எமது ஏற்றுமதித்துறைக்கான உற்பத்திப் பொருட்கள் தொடர்பிலேயே நாம் அதிகமான அக்கறையினைக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதையே நான் தொடர்ந்தும் இந்தச் சபையிலே வலியுறுத்தி வருகின்றேன்.

Related posts:

தமிழர் தாயகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டது தேர்தல்கள் திணைக்களம்!
இம்பசிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
கடற்றொழில் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெ...