அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, December 6th, 2017

தமிழ் மொழியில் மாத்திரம் பரிச்சயம் கொண்ட ஒருவர் அரச அலுவலகங்களில் மொழி புரியாமல் தமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை தொடர்கின்றது. இத்தகைய நிலைமைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில்தான் இருக்கின்றது எனப் பார்த்தால், தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அதே நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

இத்தகைய பிரச்சினைகள் பற்றிக் கேட்டால், பதிலாக மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள் எனக் கூறி பொறுப்பு வாய்ந்தவர்கள் பலரும் அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றார்கள்.

அரச அலுவலகங்களில் மொழி பெயர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள் என்றால், எத்தகைய தகுதியில் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச பணியில் தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனைப் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

2005ஆம் ஆண்டு வரையில் அரச பணிகளில் மொழி பெயர்ப்பாளர்களுக்கான பதவி நிலைகள், ஊதிய மட்டங்கள் என்பன உயர்ந்த மட்டத்திலிருந்ததாகவும், 2006ஆம் ஆண்டு முதல் அது எழுதுவினைஞர் சுப்ரா தரத்தினைவிட குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதிலிருந்து தகுதிவாய்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் அப் பதவியில் இணைந்து கொள்வதற்கு முன்வராததொரு நிலையே காணப்படுவதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நிலைமையினை மூடி மறைப்பதற்காக 2013ஆம் ஆண்டிலிருந்து தகுதி நிலை பாராமல், மேற்படிச் சேவைக்கு ஆளணிகள் நிரப்பப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது. இத்தகைய தகுதியற்ற மொழி பெயர்ப்பாளர்களிடம் நீதி மன்றங்களில் மாட்டிக் கொண்ட அனுபவம் எனக்கும் இருக்கின்றது.

மேலும், எமது நாட்டில் தற்போதைய நிலையில் அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்களுக்கான தட்டுப்பாடானது பாரிய அளவில் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. 2005ஆம் ஆண்டு வரையில் மொழி பெயர்ப்பாளர் சேவையின் 1ம் தரமானது ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பதவிக்கு சமாந்தரமாகவும், தற்காலத்தில் எம்.என். 7 ஊதிய பரிமாணத்தைக் கொண்ட பதவிக்கு சமாந்தரமானதாகவும் இருந்துள்ளதாகவும், இதே சேவையின் விN~ட தரமானது 2005ஆம் ஆண்டு வரையில் மேற்முறையீட்டு நீதிமன்ற பிரதிப் பதிவாளரின் பதவிக்கு சமாந்தரமான ஊதிய பரிமாணத்தில,; நிறைவேற்று தரத்தின் தற்போதைய எஸ். எல். 1 ஊதிய பரிமாணத்தின் 12வது கட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பதவிக்கு சமாந்திரமான நிலையில் இருந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது – என்றார்.

Related posts:

வறிய மக்களது வாழ்வியல் எழுச்சிக்கு நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா !
வீதி விபத்துக்களை  தடுப்பது தொடர்பில் பொலிசாரின் பொறுப்புகள் அளப்பரியது -  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
வென்னப்புவ வெள்ளமண்கரை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது நவீன மீன்பிடித் துறைமுகம் – அமைச்சர் டக்...

பேரம் பேசும் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்படும் - செயலாளர் நாயகம் ...
தரம் - 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு - அமைச்சர் தேவாவ...
மொத்த விற்பனை அதிகரிப்பு - பேலியகொட மத்திய மீன் சந்தையில் 40 வியாபார நிலையங்களை உள்ளடக்கிய தொகுதியை ...