தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு வேண்டும் – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, January 20th, 2023


இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கும் இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதன்போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. – 20.01.2023

Related posts:


நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பே...
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழி...
அனலைதீவு, எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு...