அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில்!

Thursday, March 18th, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்து.

இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் மற்றும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.

வ்வுனியா மாவட்டத்தில் காணப்படும் குளங்களில் நன்னீர் மீன்வளர்ப்பை ஊக்குவிப்பது, விவசாயிகளை ஊக்குவிப்பது, வளங்களை பயன்படுத்தி கைத்தொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் அடிப்படையில் பரிந்துரைகளும் ஆலோசனைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்பட்டது.

Related posts:

யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பி...
'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' - அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆ...

யாழ் போதனா வைத்தியசாலை எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - -வைத்தியர் பிரதிநிதிக...
உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!....
சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் அதிகா...