சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் அதிகாலை விஜயம்!

Monday, April 1st, 2024

தடையின்றி சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதற்கான செயற்பாட்டை  உறுதிப்படுத்துவதற்காக  கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

முன்பதாக கிளிநொச்சி சந்தைப்பகுதிக்கு கடந்த புதன்கிழமை விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடை வியாபாரிகளும், பயனாளிகளும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகளுக்கான பணிப்புரைகளை அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.

அதில் முக்கியமான கோரிக்கையாக சந்தைப்பகுதியில் குடிநீர் கிடைக்க உதவ வேண்டுமென பலரும் முன் வைத்த வேண்டுகளுக்கு தீர்வாக ஞாயிற்றுக்கிழமைக்குள் அதாவது நான்கு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திரந்தார்..

இந்நிலையில் குடி தண்ணீர் வழங்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி சந்தைப்பகுதிக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஆளணி உள்ளீர்ப்பில் அர்த்தமுள்ள அணுகுமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தேசிய நல்லிணக...
நீண்டகால முயற்சி – தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது பயணிகள் கப்பல் - அமைச்சர்களான டக்ளஸ் தே...