கட்சியின் தீர்மானத்தை நிறைவேற்றிய செயலாளர் நாயகத்திற்கு கட்சி உறுப்பினர்கள் பாராட்டு!


Tuesday, November 15th, 2016

வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைமை பதவி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டதை கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட கட்சிக் கூட்டத்தில் வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி கட்சி வகிக்கும், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்கனவே கட்சி எடுத்திருந்த தீர்மானத்திற்கு அமைவாக, கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதனுக்கு வழங்குவதற்கு கட்சி விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாகவும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்களை எழுச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.

15046294_1227460397293045_1419794816_n

வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி பொறுப்பேற்கும்போது வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைமைப் பொறுப்பை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இடையே சுழற்சி முறையில் பகிர்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 இதற்கமைவாக இறுதி எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு வடக்கு மாகாணசபை உறுப்பிரான வைத்தியநாதன் தவநாதனுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள்  நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையிட்டு வரவேற்றிருந்தனர்.

15049927_1227452550627163_701875563_n

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் உறுப்பினர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கும் அமைவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதற்கு அமைவாகவே அவர்  அது தொடர்பான அறிவித்தல் கடிதத்தினை உரிய தரப்பினரிடம் அனுப்பிவைத்துள்ளார் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் கடந்தகாலத்தில் ஐக்கிய  மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கத்திற்கு அமைவாக,யாழ் மாநகர சபையை எமது கட்சி பொறுப்பேற்கும் போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்படுத்தியிருந்த இணக்கத்துக்கமைய பிரதி முதல்வர் பதவியின் இறுதி இரண்டரை ஆண்டுகாலத்திற்கான சந்தர்ப்பத்தை அக்கட்சியினருக்கு வழங்கியிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

456

Related posts: