பதினைந்து மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – எதிர்காலத் செயற்றிட்டங்கள் தொடர்பாக ஆராய்வு!

Monday, February 19th, 2024

கடற்றொழில் திணைக்களத்தின் பதினைந்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சட்டமானது சமகாலத்திற்கேற்ப தற்போது திருத்தப்படுவது தொடர்பாகவும் , சட்ட விரோத மீன்பிடியை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு திணைக்களத்தின் ஊடாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை மேலும் வசதியாக முன்னெடுப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை நேற்றையதினம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் அமைச்சருடன் களஞ்சிய சாலைக்கு விஜயம் செய்ததுடன் களஞ்சிய சாலையை புனரமைப்புச் செய்வது மற்றும் மேலதிக தேவைகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் ...
கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு...
கடற்றொழில் திணைக்களத்தின் விற்பனையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேலும் விஸ்தரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ்...