கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிந்து நள்ளிரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உதவி கேட்டு அவசர அழைப்பு – அட்டகாசம் செய்த ஆசாமி மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிரடி நடவடிக்கை!

Monday, April 1st, 2024

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் மதுபோதையில் பொதுமக்களை தாக்கிய நபர் ஒருவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி பேருந்து தரிப்பிடத்தில் அமைதி நிலையை ஏற்படுத்த உதவுமாறு அவசர கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இரவோடு இரவாக பொலிஸாரை பேருந்து தரிப்பிடப்பகுதிக்கு அனுப்பி வைத்து அட்டகாசம் புரிந்த ஆசாமியை கைது செய்து நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதேவேளை உடனடி நடவடிக்கை எடுத்து உதவிய அமைச்சரை நேரடியாக வருமாறும் அழைத்த வியாபாரிகளின் அழைப்பை ஏற்று அதிகாலை பேருந்து தரிப்பிடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடி விஜயத்தையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் அதிகாலையில் மது போதையில் நபர் ஒருவர் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் பொதுமக்களை தாக்கியுள்ளார்.

அவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்குள்ள வியாபாரிகள் உடனடியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு குறித்த நள்ளிரவு வேளையில் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி பேருந்து தரிப்பிடத்தில் அமைதி நிலையை ஏற்படுத்த உதவுமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து இரவோடு இரவாக பொலிஸாரை பேருந்து தரிப்பிடத்திற்கு அனுப்பி வைத்து அட்டகாசம் புரிந்த நபரை கைது செய்து இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா?...
புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்த...
இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும் பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியை...

வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடு...
நிர்க்கதியானவர்கள் வீடு திரும்ப புதனன்று தீர்வு – அமைச்சரவையில் கோரிக்கை வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் ...