குறிக்காட்டுவான் – நயினாதீவுக்கு  இடையில்  பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் !

Tuesday, November 21st, 2017

கட்டுமாணத் தொழில்நுட்பங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், குறிக்காட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்து முடியும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் அவர் உரையாற்றுகையில் –

வழுக்கியாறு பாலம் முதற்கொண்டு அராலி ஊடான குறிக்காட்டுவான் பாதை புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டிய தேவை அவசியமாகின்றது. தென் பகுதியிலிருந்து நாளாந்தம் பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் நயினாதீவு நோக்கி வருவதாலும், வலிகாமத்திற்கும் தீவகப் பகுதிகளுக்குமான இலகுவான மார்க்கமாக இருப்பதாலும் இப்பாதையின் தேவை மிக முக்கியமானதாகவே உள்ளது.

தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் மிகவும் வினைத்திறனற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இதற்கு ஆளணிகள் இன்மையும் ஒரு பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது. எனவே, படகு செலுத்துநர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பதவி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்யுள்ளது.

வேலணை – ஊர்காவற்துறை பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது.

இன்றைய நிலையில் கட்டுமாணத் தொழில்நுட்பங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், குறிக்காட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்து முடியும்.

தற்போதைய நிலையில் ஏ – 9 வீதியில் மிகவும் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் மற்றும் அதிகளவிலான வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், வடமராட்சிக்கான இயக்கச்சி ஊடான மருதங்கேணி பாதை, முறுகண்டி முதல் பரந்தன் சந்தி வரையிலான பாதை, மிருசுவில் – வரணி பாதை, சாவகச்சேரி முதல் அல்லாறை ஊடான ஆனையிறவு பாதை போன்ற சமாந்தர பாதைகள் தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

கிராமிய வீதிகளை பிரதான வீதிகளுடன் இணைக்கின்ற ஐ சுழயன திட்டத்தினை விரைவு படுத்த வேண்டும். வட்டுவாக்கல் பாலம் புனரமைப்பு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.  யாழ்ப்பாணம் சங்கானை ஊடான மானிப்பாய் வீதி புனரமைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் மேற்படி எனது கோரிக்கைகளை கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தில் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்.

Untitled-3 copy

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள்!
இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே எனது அரசியல் தந்திரோபாயம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சு – அமைச்சர் டக்ளஸ் த...

சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செ...
வடக்கு மாகாண சபையில் ஊழல் : வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் மக்கள் -டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்...
புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு - பேருந்து சேவையை ஆரம்ப...