இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே எனது அரசியல் தந்திரோபாயம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 26th, 2020

இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே  தன்னுடைய அரசியல் தந்திரோபாயம் எனறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணைச் சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீவக பகுதிக்கான தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதன் ஓர் அங்கமாக வேலணை, துறையூர் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தீவகத்தின் மற்றொரு பகுதியான வேலணை, சரவணை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததுடன், மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் வேலணை, செட்டிபுலம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதனிடையே ஈவினை தெற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   ஈவினை தெற்கு கலைமகள் விளையாட்டு கழகத்திற்கான மைதானத்தினை பெற்றுத்தருவதாகவும் விவசாய நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

மேலும்  குப்பிளான் தெற்கு, புன்னாலைக் கட்டுவன், அறிவொளி சனசமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு மக்களது தேவைப்பாடுகள் தொடர்டபில் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...
சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ...