பிரபா கணேசனை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, January 4th, 2017
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசனின் அவர்களது 54 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு கொழும்பு கதிரேசன் ஆலயத்தில் இன்றையதினம் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு பிரபா கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தக்கொண்டதுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்துள்ளார்.
மேலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய நிர்வாக செயலாளர் புரட்சிமணி அவர்களும் இன்றையதினம் பிறந்தநாளை கொண்டாடும் பிரபா கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார். இதன்போது கட்சியின் நிர்வாக தோழர்கள் பலரும் உடனிருந்தனர்.







Related posts:
எதிர்வரும் திங்களன்று 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் டக்ளசி...
வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ...
|
|
|


