மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகினறோம் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 13th, 2017

போரின் பாதிப்புக்குள்ளாகி தமது அவயவங்களை இழந்து இன்று சமூகத்தில் வாழ்வாதாரத்திற்காகக் கஷ்டப்படும் மக்களுக்கு சுயதொழில்துறையினூடாக அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுததுவது தொடர்பில் நாம் விஷேட கவனம் செலுத்திவருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் (எங்களால் முடியும்) அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் மூன்று தசாப்தங்களாக தொடர்ந்த கொடிய யுத்தத்தினால் எமது மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களும் சொத்துக்களும் இழக்கப்பட்டது மட்டுமன்றி இந்த யுத்தத்தினால் கணிசமானோர் தமது அவயவங்களை இழக்கவேண்டிய துர்ப்பாக்கியத்துடன் வாழ்ந்தவருகின்றனர்.

குறிப்பாக இவ்வாறானவர்களினது குடும்பங்கள் தமது நாளாந்த வாழ்வை கொண்டுசெல்வதில்கூட பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். அத்துடன் நாளாந்த கூலிவேலைகளைக்கூட செய்யமுடியாதவர்களாகவும் தமக்கான நிரந்தர வருமானம் ஒன்றை ஈட்டிக்கொள்ளமுடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே இவர்களது வாழ்க்கையை சுயதொழில்துறைகளூடாகவே மாற்றியமைக்முடியும் என்பதில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றோம்.

இதற்காக நாம் பல திட்டங்களை வகுத்து அவற்றை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்;கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா கூட்டிக்காட்டினார்.

‘எங்களால் முடியும் அமைப்பின்” கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா அவற்றுக்கான தீர்வுகள் குறித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கும் முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் உடனிருந்தார்.

Related posts: