மக்களின் நலன்களுக்காக அதிகார வரம்பை மீறி செயற்படும் அரசியல் தலைவர்களை மக்கள் இனங்கா ணவேண்டும் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 14th, 2017

வடக்கு மாகாணசபை எமது கைகளுக்கு கிடைக்கப்பெற்றிருந்தால் வரையறைகளை மீறி மக்களுக்கான சேவைகளை துணிவுடனும் திறமையுடனும் எம்மால் முன்னெடுத்திருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் பல கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கு மக்களே எமக்கு அரசியல் பலத்தை தரவேண்டும். அவ்வாறாக அரசியல் பலம் கிடைக்கும் சர்தர்ப்பத்தில் அதிகாரத்திற்கு மேலாகவும் வரையறைக்கு அப்பாற்சென்றும் தற்துணிவுடன் எம்மால் பணிகளை முன்னெடுக்கமுடியும்.

இவ்வாறான பணிகள் ஊடாகவே சமூகத்தில் புரட்சிகரமான மாற்றங்களையும் ஏற்படுத்தமுடியும்.

யுத்தம் முடிந்த நிலையிலும் இங்குள்ள பல வீதிகள் செப்பனிடப்படாமல் இருக்கின்றமையானது எமக்கு மிகுந்த வேதனையைத்தருகின்றது. கடந்த காலங்களில் எமது அரசியல் தலைமைகளுக்கு கிடைக்கப்பெற்ற பல சந்தர்ப்பங்கள் நழுவப்பட்டு தவறவிடப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணசபை எமது கைகளுக்கு கிடைத்திருக்குமானால் அதற்கான எல்லைகளையும் வரையறைகளையும் மீறி பல்வேறுபட்ட மக்கள் நலன்சார்ந்த பணிகளை நாம் முன்னெடுத்திருப்போம்.

ஆனாலும் துரதிஷ்டவசமாக வடக்குமாகாணசபையை வென்றெடுத்த தமிழ் தேசியக் சுட்டமைப்பினரின் கையாலாகாத்தனம் குறித்து மக்கள் விரக்தியும் கொதிப்பும் அடைந்துள்ளனர்.

தீர்வுகாணக்கூடியதான பிரச்சினைகளுக்கு கூட வடக்கு மாகாணசபை நொண்டிச் சாட்டுக்களை கூறியும் அதிகார துஷ்பிரயோகத்திலும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளமை நிரூபாணமாகியுள்ளது.

எனவே வர இருக்கின்ற ஒவ்வெரரு சந்தர்ப்பங்களிலும் மக்கள் தமக்கான அரசியல் தலைமைகளை உரியமுறையில் தெரிவு செய்யும் பட்சத்திலேயே அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் இங்க சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என டக்களஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் லிங்கேஸ் ஆகியோர் உடனிருந்தனர்

Related posts: