விருப்பினார் டக்ளஸ் – நிறைவேற்றினார் ஜனாதிபதி – தலைநகரில் பறக்கிறது தமிழர் கொடி!
Monday, October 24th, 2022
இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும் ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் ஜனாதிபதி மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்படாமை தொடர்பாக இந்து மதம் சார்ந்தவர்களினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதுதொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துச் சென்றிருந்ததுடன், தீபாவளிப் பண்டிகையை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. – 24.10.202
Related posts:
எதிர்ப்புக்காட்டுவதனூடாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் சாதிக்க முடியாது - செயலாளர் நாயகம் ...
மீன்பிடி படகு உற்பத்தியாளர்கள் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் கலந்துரையாடல்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அகவைநாள் இன்று - சர்வ மதங்களின் தலைவர்கள் ஆசீர்வாதம்..!
|
|
|
முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
வடக்கு - கிழக்கில் விசேட தேவையுடைய நிலையில் வாழ்ந்துவரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்ட...
வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உற...


