கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது!

Wednesday, March 7th, 2018

கடந்த கால யுத்தம் என்பது, எதிர்கால தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி, எதிர்காலத்தில் இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்படுதலில் இருந்து எல்லா ஆட்களையும், பாதுகாத்தல், பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் தொடர்டபில் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த கால யுத்தமானது கற்றறிந்த பாடமாக இருக்க வேண்டும். கழற்றியெறிந்த பாடமாக இருக்கக்கூடாது. அந்தக் கற்றறிந்த பாடங்களின் வேதனைமிக்க கதாபாத்திரங்களாகவே இன்று காணாமற்போனோர்களது உறவினர்கள் காத்திருக்கின்றார்கள். காணாமற்போன தங்களது உறவுகளைத் தேடிச் செல்லும் பயணத்தில், அவர்கள் இன்று கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டாவது, தங்களது காணாமற் போன உறவுகளைக் கண்டறிவதற்கான பாதையில் வெளிச்சம் பிறக்கும் என்ற அவர்களது எதிர்பார்ப்பகளும,; தற்போது தகர்க்கப்பட்டு வருவதாகவே தெரிய வருகின்றது.

காணாமற்போரைக் கண்டறிவதற்கான அலுவலகம் தொடர்பில் ஆரம்பத்தில் எமது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இன்று பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியவர்கள் பலரும், தெரிவித்து வருகின்ற ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளால் அம் மக்களது நம்பிக்கைகள் சிதைந்துள்ளதாகவே தெரிய வருகின்றது.

எனவே, மேற்படி காணாமற்போனோரைக்  கண்டறிவதற்கான அலுவலகம் தொடர்பில் – அதன் பணிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விளக்கமாக அறிவுறுத்தப்படல் வேண்டும எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts:


தேயிலையின் தரத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...
தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்திற்கும் தீர்வு காணவேண்டும் என்பதில் ஜனாதிபதி ஆர்வமுடன...