தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்திற்கும் தீர்வு காணவேண்டும் என்பதில் ஜனாதிபதி ஆர்வமுடன் இருக்கின்றார் – திருக்கோணேஸ்வரர் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளின் பின் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023

தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணவேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆர்வமுடன் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நன்மை வேண்டி திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்பதாக இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை திருகோணேஸரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மங்கள வாத்தியங்களுடன் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டிருந்தார்.

இன்று காலை நடைபெற்ற குறித்த பூசை வழிபாடுகள் இலங்கையின் 75 ஆவது சுதந்திர  தினத்தை முன்னிட்டு, நாட்டிற்கும் நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் மாணவிகளின் பஜனை நிகழ்வுகளிரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை - டக்ளஸ் ...
இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே எனது அரசியல் தந்திரோபாயம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியை யுத்தம் செய்வதற்கொன கூறி வீண் புரளியைக் கிளப்பாதீர்கள் ...