விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை – சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைப்பு!

Friday, January 21st, 2022

சட்ட விரோதச் செயற்பாடுகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்தினுள் ஐந்து கொலைகள் இடம்பெற்ற பரந்தன், சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, அண்மைக்காலத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பான விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை என்று பிரதேச மக்களினால் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிவபுரம் கிராமத்தில் பொலிஸ் காவலரண் அமைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைச்சர், சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்து விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டிருந்தார்

Related posts:


புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...
காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - 10 வீத கழிவு முறைமையை இல்லாதொழிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!