விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 10 வீத கழிவு முறைமையை இல்லாதொழிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, July 14th, 2023


……..
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கலத்துரையாடலில், விவசாயிகளிடம் இருந்து சந்தை வியாபாரிகளினால் அறவிடப்படுகின்ற விவசாய உற்பத்திகளின் ஒவ்வொரு 10 கிலோவிற்கும் ஒரு கிலோகிராம் கழிவு முறைமையினை இல்லாமல் செய்வது உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

விவசாயிகளின் ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாயிகளுக்கும் மக்களுக்கும்  நியாயமான விலை  கிடைக்கும் வகையில் சந்தை செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். – 14.07.2023

Related posts:


அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் - டக்ளஸ் ...
சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் - அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு!
வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவான...