முழங்காவில் படித்த வாலிபர் திட்டக் காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண டக்ளஸ் தேவானந்தா முயற்சி!

Thursday, June 30th, 2016

முழங்காவில் படித்த வாலிபர் திட்ட காணியை பங்கீடு செய்வதில் உள்ள  பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவனந்தா விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

முழங்காவில் பகுதிக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அம்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

1978 ஆம் ஆண்டு முழங்காவில் பகுதியிலுள்ள குறித்த காணிகள் படித்தவாலிபர் திட்டத்திற்காக பங்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு பங்கீடு செய்யப்பட்ட குறித்த காணிகளின் உரிமையாளர்கள் நாட்டின் யுத்த சூழல் காரணமாக தமது காணிகளை விட்டு வேறிடங்களில் குடியிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தமது காணிகளுக்கு மீளவும் திரும்பிவருகின்றனர்.

இதனிடையே காணி உரிமையாளர்கள் இல்லாதிருந்த நிலையில் அக்காணிகளில் தற்காலிகமாக வசித்துவந்த மக்கள் குறித்த காணிகளில் தமக்கும் பங்கீடு செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் துறைசார்ந்த அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

2

3

5

Related posts:

சாவகச்சேரி மகிழங்கேணி குடியேற்றக் கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் டக்ளஸ் தே...
சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மீள் ஏற்றுமதிகளை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப...

முல்லைத்தீவுமாவட்ட உதைபந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்று ...
காணி உரிமங்களுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள்  - டக்ளஸ் தேவானந்தாவிடம் கந்தர்மடம் வடகிழக்கு பகுதி மக்க...
யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர...