தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, February 8th, 2019

அரச நிறுவனங்களின் ஊடான வெளிப்பாடுகளின் பயன்கள் எமது மக்களுக்கு உரிய முறையில் எடுத்துச் செல்லப்படுகின்றதா? என்ற கேள்வியானது,இத்தயை நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாட்டு முடக்கங்களோடு வெளிப்படுகின்ற ஒரு கேள்வியாகும்.

அந்த வகையில் இங்கே தேசிய பயிலுநர் மற்றும் தொழில் பயிற்சி அதிகார சபை பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்கள் நாடளாவிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்து, ஏனைய தமிழ் மொழி மூல பரிச்சயம் மாத்திரம் கொண்ட மக்கள் வாழுகின்ற மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமாக தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கு தொழில் பயிற்சி  போதனா ஆசிரியர்கள் போதியளவில் இல்லை என்றே தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தோடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதைய தொழில் சந்தையில் வேலைவாய்ப்புகள் இன்றிய நிலையில் இருக்கின்ற தமிழ் மொழி பரிச்சயம் கொண்டவர்கள் தொழிற் பயிற்சிகளை நாடுகின்ற நிலையில், அவர்களுக்கான மொழி மூல பயிற்சிப் போதனைகள் இல்லாவிட்டால், அந்தப் பயிற்சி நிலையங்களால் எமது மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை.

தொழில் பயிற்சி அதிகார சபையானது கடந்த 2018ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் 26 துறைகள் சார்ந்த தமிழ் மொழி மூல பயிற்சி போதனா ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கான விளம்பரமொன்றினை வெளியிட்டிருந்தது. இதன் ஊடாக எத்தனை போதனா ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்களோ தெரியாது. ஆனால், அந்த விளம்பரம் இன்னமும் தொழில் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தில் அகற்றப்படாமல் இருக்கின்றது. ஆகவே, எந்தவொருவரும் தமிழ் மொழி மூல பயிற்சி போதனா ஆசியர்களாக இதுவரை இணைத்துக் கொள்ளப்படவில்லையா? என்ற சந்தேகமே எழுகின்றது.

Related posts:

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும்
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் - வவுனியா மாநாட்டில் செயலாள...